உள்ளூர் செய்திகள்

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை

கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் 94 சதவீத தேர்ச்சி பெற்றனர். 16 மாணவ, மாணவிகள் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், கணிதத்தில் மூன்று மாணவர்களும் ஈ ஜி பிரிவில் இரண்டு மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் இரண்டு மாணவர்களும்  100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். துறை வாரியாக சி.எஸ்.சி., பிரிவில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இ.சி.இ., பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 100 சதவீதமும், மூன்றாம் மாணவர்கள் 98 சதவீதமும், இ.இ.இ., பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 95 சதவீதமும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 98 சதவீதமும், மெக்கானிக்கல் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 80 சதவீதமும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 87 சதவீதமும், சிவில் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 82.6 சதவீதமும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கும், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி, கல்லூரி முதல்வர் அய்யாதுரை ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்