உள்ளூர் செய்திகள்

அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைந்தன

சென்னை: திருச்சியிலுள்ள சென்னை மருத்துவக் கல்லூரியில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ள நிலையில், சென்னை, தண்டலத்தில் மாதா மருத்துவக் கல்லூரி புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்கள் 767 லிருந்து 745 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும், சென்னை தாகூர் மருத்துவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் இந்த ஆண்டு, சென்னை தண்டலத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மாதா மருத்துவக் கல்லூரிக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இக்கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 75 எம்.பி.பி.எஸ்., சீட்கள் கிடைக்கும். திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரியில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. இதன்மூலம், அரசு ஒதுக்கீட்டில் 97 இடங்கள் குறைந்துள்ளன. மொத்தத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்கள், 767 லிருந்து 745 ஆக குறைந்துள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு அரசு ஒதுக்கீடாக, சிறுபான்மை தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீதமும், சிறுபான்மை அல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் 65 சதவீதமும், இடங்களை தருகின்றன. இந்த ஆண்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான, &'கட்-ஆப்&' கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, &'கட்-ஆப்&' மதிப்பெண்ணும் உயரும் என தெரிகிறது. &'கட்-ஆப்&' விவரம்: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, கடந்த ஆண்டு, &'கட்-ஆப்&' மதிப்பெண் விவரம்: பிரிவு கடந்த ஆண்டு, &'கட்-ஆப்&' ஓ.சி., 194.25பி.சி., 193.00பி.சி.எம்., 192.00எம்.பி.சி., 190.50எஸ்.சி., 183.00எஸ்.சி.ஏ., 173.50எஸ்.டி., 151.25


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்