ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜி.யை ஒதுக்கும் மாணவிகள்
இதுவரை ஆட்டோமொபைல் பிரிவை ஒரு மாணவியர் கூட தேர்வு செய்யவில்லை. அதேப்போல, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை வெறும் 20 மாணவிகள் மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். பொறியியல் பாடப்பிரிவில், இதுவரை 11,010 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 5844 பேர் மாணவர்கள், 5166 பேர் மாணவிகளாவர். பொதுவாக எல்லாப் பிரிவுகளிலுமே மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர். சில பாடப்பிரிவுகளை மாணவிகளே அதிகமாக எண்ணிக்கையில் தேர்வு செய்துள்ளனர். ஆனால், தொழிற்கூட அமைப்பில் இருக்கும் படிப்புகளான ஆட்டோமொபைல் படிப்பினை மாணவிகள் தேர்வு செய்யவே இல்லை. அதேப்போலத்தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கையும் மாணவிகள் விரும்பவில்லை. எல்லாவற்றையும் விட, எலக்ட்ரானிக்ஸ் ஆன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பினை 1,707 மாணவிகள் தேர்வு செய்துள்ளனர். இந்த படிப்பை வெறும் 995 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்தபடியாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் பிரிவை 1140 மாணவியர் தேர்வு செய்துள்ளனர்.