பெண்கள் விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்
இப்படிப்பை தேர்வுசெய்துள்ள 3336 மாணவர்களில், 2144 பேர் பெண்கள். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளை ஆண்களைவிட பெண்களே அதிகளவில் தேர்வு செய்துள்ளனர். அதேசமயம் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் ஏரோநாடிக்கல் படிப்புகளை பெண்கள் குறைந்தளவிலேயே தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல் படிப்பு, அதிகளவில், மாணவர்களால் தேர்வுசெய்யப்பட்ட படிப்பாக உள்ளது. பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கிய கடந்த 6 நாட்களில் 13,694 மாணவர்கள் பொறியியல் சேர்க்கைப் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தமாக 16,543 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், 2795 மாணவர்கள் கவுன்சிலிங் வரவில்லை(ஆப்சென்ட்) மற்றும் வந்தவர்களில் 54 பேர் எந்தப் படிப்பையும் தேர்வு செய்யவில்லை. பொறியியல் சேர்க்கைப் பெற்றவர்களில், அண்ணாப் பல்கலைக்கழகத்தை இதுவரை சுமார் 2440 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை 3512 மாணவர்களும், சுயநிதிக் கல்லூரிகளை 7742 மாணவர்களும் தேர்வு செய்துள்ளனர்.