மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு கலந்தாய்வு
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சிலிங், ஜூலை 19 ம் தேதி சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் துவங்குகிறது. வரும் 25ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு, கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கவுன்சிலிங் விவரம்: தேதி நேரம் பிரிவு கட்-ஆப் மதிப்பெண்ஜூலை19 காலை 10 மணி சிறப்பு பிரிவினர் (முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள்) 2 மணி பொது பிரிவு 198.00 -188.75ஜூலை20 9 மணி பொது பிரிவு 188.75 - 181.50 2 மணி பொது பிரிவு 181.25 - 179.50ஜூலை 21 9 மணி பொது பிரிவு 179.25 - 175.50 2 மணி பொது பிரிவு 175.25 - 173.75ஜூலை 22 9 மணி பொது பிரிவு 173.50 - 170.75 2 மணி பொது பிரிவு 170.50 - 169.50ஜூலை 23 9 மணி பொது பிரிவு 169.25 - 167.00 2 மணி பொது பிரிவு 166.75 - 166.00ஜூலை 25 9 மணி பொது பிரிவு 165.75 - 164.00 2 மணி பொது பிரிவு 163.75 - 163.00 கவுன்சிலிங் தேதிகள், மாணவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப்பெறாதோர், தங்களின் கவுன்சிலிங் தேதியை, www.tnhealth.org www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.