இந்திய விமானப் படையில் ஏர்மென் பணியிடங்கள்
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் ஒன்று விமானப் படை. இந்தப் படை 1932ல் நிறுவப்பட்டது. தற்போது சர்வ தேச அளவில் தரம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இதில் ஏர்மென் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவைகள்:இந்திய விமானப் படையின் குரூப் எக்ஸ் (டெக்னிகல்) பதவிக்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விமானப் படையின் ஏர்மேன் பதவிக்கு விண்ணப்பிக்க இவர்கள் 01.01.1991 முதல் 28.02.1995க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். பிளஸ் 2 அளவிலான படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு இயற்பியல் மற்றும் கணிதத்தைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். மூன்றாண்டு கால இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரி அல்லது பிற கல்வி நிறுவனங்கள் மூலமாக முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். உடல் தகுதி: பொதுவாகவே பாதுகாப்புப் படைகளுக்கு ஆட்கள் எடுக்கும் போது கல்வி மற்றும் வயது தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல்தகுதியும் தேவைப்படும். இந்தப் பதவியும் அந்த வகையைச் சார்ந்ததே ஆகும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க உயரம் குறைந்த பட்சம் 152.5 செ.மீ.,யும் வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு குறைந்த பட்சம் 5 செ.மீ., விரிவடையும் தன்மையும், இவை தவிர சில குறைந்த பட்ச தேவைகளும் உள்ளன. முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும். தேர்ச்சி முறைஇந்திய விமானப் படையின் ஏர்மென் பதவிக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு , நேர்காணல், டிரேடு அலகேஷன் டெஸ்ட், மருத்துவப் பரிசோதனைத் தேர்வு என்ற பல்வேறு நிலைகளில் தேர்ச்சி இருக்கும். இதர தகவல்கள்: ஏர்மேன் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 09.08.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற வற்றைப் பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும். முகவரி President, Central Airmen Selection Board, Post Box No. 11807, New Delhi - 110 010 இணையதள முகவரி: http://indianairforce.nic.in/