உள்ளூர் செய்திகள்

எழுத்தறிவு பெற்ற மாவட்டத்தில் கன்னியாகுமரி முதலிடம்

மாவட்ட வாரியாகத் தமிழக அரசு எடுத்த உத்தேச மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் இநத தகவல்கள் தெரிய வந்துள்ளன. தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 5.24 கோடி. இதில் 2.47 கோடி நபர்கள் கிராமபபுறங்களிலும், 2.77 கோடி நபர்கள் நகர்ப்புரங்களிலும் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் 1.18 கோடி அளவிற்கு எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 18.63 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 15.67 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். கன்னியாக்குமரியை அடுத்து இரண்டாம் இடம் பிடித்த தூத்துக்குடி மாவட்டத்தில் 17.38 லட்சம் பேரில், 13.57 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 46.81 லட்சம் பேரில் 38.50 லட்சம் பேர் அதாவது 90.33 விழுக்காட்டினர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் கடைசி மூன்று இடங்களை ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளன. கடைசி இடத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தின் 15.03 லட்சம் மக்கள் தொகையில் 8.68 லட்சம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 22.60 லட்சம் பேரில் 15.16 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்