உள்ளூர் செய்திகள்

தமிழக அரசு பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு

தமிழக அரசின் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டபள்ளி அமைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். வறுமையின் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்கள் தொடர்ந்து படிக்க வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் என்றும், இதன்மூலம் 25லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும், இதற்கு ரூ.394 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது திருநெல்வேலியில் கால்நடை மருத்துவக் கல்லூரி துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போடிநாயக்கனூர் அருகே புதிதாக அரசு பொறியியல் கல்லூரியை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் வளச்சி பெருக்கும் பொருட்டு புதிய தொழில் கொள்‌கைள் வகுக்கப்பட உள்ளன. தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு சீறுடை, காலணிகள் வழங்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணி வழங்க பட்ஜெட்டில் ரூ. 4.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட லாப்டாப் வழங்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளுக்கு பாவாடை, தாவணிக்கு மாற்றாக சுடிதார் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. திருமணத்திற்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்