ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி
தொழிற்கல்வியில் சேர்ந்து படிக்க போதிய நிதி வசதி இல்லாத மாணவர்கள் 100 பேருக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கல்லூரிகளில் இடம் கிடைத்தும், நிதி வசதி இல்லாத காரணத்தால் சேர முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகள், தலைமைச் செயலகத்தில் உள்ள தனிப்பிரிவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பினர். அவை பரிசீலிக்கப்பட்டு, மருத்துவம், மருத்துவ சார்படிப்புகளில் சேர 11 மாணவர்களுக்கும், பி.இ., பி.டெக்., படிக்க 80 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக அளிக்கப்பட்டது.