உள்ளூர் செய்திகள்

இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி-ஜெயலலிதா

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கு 10 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறி, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டப்பேரவையில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்கப்பட்டதும், அவர், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் வகையில் சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவோம்" என்று அறிவித்தார். சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனடியாக பள்ளிகளுக்கு அனுப்பும் வகையில், அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தக கிடங்குகளில் இருந்து புத்தகங்கள் உடனடியாக பள்ளிகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள், சமச்சீர் பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவிகளிடம் அளிக்கப்பட்டு, வகுப்புகள் துவங்க உள்ளன. ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை பாடப்புத்தகங்கள் கிடைக்காத நிலையில் இருந்த மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தன் இந்த தீர்ப்பை கேட்டு உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்