உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் சாவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திருவல்லிக்கேணில் உள்ள தனியார் விடுதியில் அவர்  தங்கியிருந்தார். சென்னை மாரத்தான் போட்டியில் பங்கேற்க, சந்தோஷ் விரும்பினார். பெசன்ட் நகர் வரை ஓடி விட்டு மீண்டும் காந்தி சிலை அருகே சந்தோஷ் வேகமாக ஓடி வந்தார். வந்த வேத்தில், திடீரென கீழே மயங்கி விழுந்தார். அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர்  இறந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிரேதப் பரிசோதனைக்காக, அவரது உடல், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்