உள்ளூர் செய்திகள்

இந்தியா உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

சிறந்த உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இடம்பெறாததை அடுத்து இந்தியா உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் இதழ் எடுத்துள்ள சிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பிரிட்டன் பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்ட், காம்பிரிட்ஜ், இம்பீரில் காலேஜ் லண்டன் ஆகியவை முன்னணி வகிக்கின்றன. மேலும் குறிப்பிடத்தக்க வகையில் பல்கலைகளின் 200 இடங்களில் 75 அமெரிக்கப் பல்கலைகள் இடம்பெற்றுள்ளது. அடுத்தபடியாக 32 பிரிட்டன் பல்கலைகளையும், ஜெர்மனி (12), நெதர்லாந்து (12), கனடா (9) இடங்களையும் பிடித்துள்ளன. எப்போதும் 200 இடங்களுக்குள் வரும் இந்திய பல்கலைகள் இந்த ஆண்டு அந்த வாய்ப்பை இழந்துவிட்டன. இதற்குக் காரணம்,இந்த பட்டியலில் சேர்க்க தேவையான தகுதிகள் முழுவதும் உள்ள இந்திய பல்கலை ஒன்று கூட இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும்காலத்தில் இந்தியா உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்