உள்ளூர் செய்திகள்

நடந்து முடிந்த தேர்வுகள் குறித்தும் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் நடத்திய ரெய்டில் சிக்கிய ஆவணங்களை, கோர்ட்டில் சமர்ப்பித்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, அடுத்த கட்டமாக, நடந்து முடிந்த பணியாளர் தேர்வுகள் தொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளது. தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் கூட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்ததாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், தேர்வாணைய தலைவரான உதயச்சந்திரன், சமீபத்தில் நடந்த பணியாளர் தேர்வுகள் குறித்த விசாரணையை துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினரும், இதற்கு முன்னதாக நடந்த சில பணியாளர் தேர்வுகள், தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள், அவர்கள் பயிற்சி பெற்ற மையங்கள் உள்ளிட்டவற்றிலும் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தேர்வாணைய இணை இயக்குனர், துணை இயக்குனர் மற்றும் சில பிரிவுகளின் கண்காணிப்பாளர்களிடமும் விசாரணை நடக்கவுள்ளது. தேர்வாணைய செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கைகள், சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்