உள்ளூர் செய்திகள்

சத்துணவு என்றாலே அலறும் வால்பாறை மாணவர்கள்

வால்பாறை அடுத்துள்ளது மானாம்பள்ளி எஸ்டேட். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 19 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு நேற்று வழக்கம் போல் கத்தரிக்காய், பீட்ரூட் கறியுடன் உணவு வழங்கப்பட்டது. சத்துணவு சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் 9 மாணவர்களுக்கு திடீர் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது. இதை அறிந்த மற்ற மாணவர்கள், சத்துணவு சாப்பிடவில்லை. சிவப்பிரகாஷ், நவீன்குமார், விஜயா, லட்சுமி, பிரியா, அருண், மணிகண்டன், மகேஸ்வரி உட்பட ஒன்பது மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்øகாக சேர்க்கப்பட்டனர். வால்பாறை நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், “குழந்தைகளுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுகிறது. வேகாத முட்டை வழங்கி வருகின்றனர். வயதானவர்களை கொண்டு சத்துணவு சமைப்பதால், எங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது,” என்றனர். கடந்த மாதம் வால்பாறை அடுத்துள்ள லோயர்பாரளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து நான்கு முறை வாந்தி பேதி ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம், நகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் தான் என்று, மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். இதற்கிடையில், சத்துணவு அமைப்பாளர் சின்னத்தாய் மற்றும் சமையலர், உதவியாளர்கள் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்