இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பணிகள்
எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் மருத்துவமனையின் பெங்களூரு மையத்தில் 23 லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுகள்:பெங்களூரு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சீனியர் எம்.ஆர்.டி., லேப் டெக்னீசியன், ஜூனியர் ரேடியோகிராபர், ரேடியோகிராபர், பார்மஸிஸ்ட், லேப் அஸிஸ்டென்ட் போன்ற பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன. தேவைகள்:விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி வயது மற்றும் கல்வித் தகுதி மாறுபடுகிறது. எனவே முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். லேப் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எம்.எல்.டி., பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தத் துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பதும் அவசியத் தேவையாகும். இதர தகவல்கள்:இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் உள்ள பிரிவின் தன்மைக்கேற்ப ரூ.75/ அல்லது ரூ.125/ கட்டணமாகச் செலுத்த வேண்டும். விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பக் கட்டணத்தை இ.எஸ்.ஐ.சி.,யின் பரிந்துரை செய்யப்பட்ட சலானின் மூலமாக கோர் பேங்கிங் வசதி கொண்ட ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் Power Jyothi Account No 31177956888/31177964973/ 31177965842/31177966120/31177966517 என்ற புது டில்லியில் உள்ள அக்கவுன்ட் எண் ஏதாவது ஒன்றில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் வயது, ஜாதி, கல்வித்தகுதி போன்ற உரிய ஆவண நகல்களையும் இணைக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணைப்புகளுடன் சேர்த்து பின்வரும் முகவரிக்கு 15.12.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முகவரி:The Medical Superintendent, ESIC PGIMSR and Model Hospital, Rajajinagar, Bangalore - 560 010.