உள்ளூர் செய்திகள்

உதவித் தொகை வழங்க புதிய ஏற்பாடு

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை வழங்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, மாவட்ட வாரியாக உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். இவை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த முறையால் பல இடங்களில் கல்வி உதவித் தொகை காலதாமதம் ஆகிறது என மாணவர்கள் முறையிட்டனர். இதனால், அரசு சார்பில் என் ஐ சி  மூலம் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் உதவித் தொகை வழங்கும் திட்டம் கல்லூரிகளில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனி மென்பொருள் இம்மாத இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும். ஆவணங்களை முறையாக இருந்தால் பள்ளிகளுக்கே காசோலையாக முழுத் தொகையும் அனுப்பி விடுவோம். இந்த திட்டம் முதல் முறையாக கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அருமைதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்