உள்ளூர் செய்திகள்

இந்திய ‘செப்’களுக்கு வரவேற்பு; ஐ.டி.,க்கு ‘நோ’

பிரிட்டனில் இந்திய ஐ.டி., திறனாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இந்த போக்கில் இப்போது கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டினர் வருகை பற்றி ஆராய நிறுவப்பட்ட கமிட்டி ஒன்று இந்திய ஐ.டி., துறையினர் பிரிட்டனுக்குத் தேவைப்படவில்லை என்றும் இந்திய சமையல் நிபுணர்களுக்கு பிரிட்டன் சிவப்பு கம்பள வரவேற்பு தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள், கன்சல்டன்டுகள், சிறப்புப் பிரிவு நர்சுகள், சிவில் மற்றும் கெமிக்கல் இன்ஜினியர்கள் ஆகியோரும் பிரிட்டனில் தற்போது தேவைப்படுகிறார்கள் என இந்த கமிட்டி கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்