உள்ளூர் செய்திகள்

கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தேர்வு நடந்தது

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1700க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை முறையாகப் பணி நியமனம் செய்வதற்கு இத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 1,725 பேர் இத்தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகளும் உடனே வெளியிடப்பட்டன. இத்தேர்வு எழுதிய 1,686 பேர் தேர்வு பெற்றனர். 28 பேர் தோல்வியடைந்தனர்; ஒருவர் வரவில்லை. 10 பேரின் தேர்வு முடிவுகள், ஐகோர்ட் உத்தரவுப்படி, நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், வெப்சைட்டில் வெளியிடப்பட உள்ளன. அதன் பிறகு, கவுன்சிலிங் நடத்தி, புதிய பணி நியமனங்கள் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்