உள்ளூர் செய்திகள்

இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆம்பூர்: தமிழக அரசு வசங்கும் இலவச மடிக்கணினி கேட்டு, ஆம்பூர் சாகிதா கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தக் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. அப்போது, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தங்களுக்கும் மடிக்கணினி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு கடந்த மாதம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் வழங்கவில்லை. இதை கண்டித்து மாணவர்கள் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆம்பூர் - வாணியம்பாடி ரோட்டில் திடீர் சாலை மறியல் செய்தனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., விஜயகுமார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் மாணவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்