உள்ளூர் செய்திகள்

ஹாக்கியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

வேலூர்: ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. வேலூர் மாவட்ட அளவிலான ஆக்கி லீக் போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நவ.15, 16 மற்றும் 22ம் தேதிகளில் நடந்தது. இந்த போட்டியில் வேலூர் மாவட்டம் முழுவம் இருந்து 10 ஹாக்கி அணிகள் கலந்து கொண்டது. போட்டிகள் லீக் தொடர் முறையில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் விளையாடிய வேலூர் லெவன் தண்டர்ஸ் ஆக்கி அணி ஆற்காடு நேரு ஆக்கி அணியை 2க்கு 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற வேலூர் தண்டர்ஸ் ஆக்கி அணிக்கு வேலூர் மாவட்ட தள கள சங்க துணைத் தலைவர் கலைமகள் இளங்கோவன் பரிசுகள், கோப்பை வழங்கினார். இதில் வெற்றி பெற்ற அணி கடலூரில் நடக்க உள்ள மண்டல அளவில் நடக்கும் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்