மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர்கள் முற்றுகை
மதுரை: தமிழ்நாடு உயர் கல்வி மன்றம், கல்லூரி "செமஸ்டர்" கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்களை கடந்த வாரம் உயர்த்தியது. இதை கண்டித்து, அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், மதுரை காமராஜ் பல்கலை வளாகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பதிவாளர் (பொறுப்பு) முத்துமாணிக்கம், டீன் ராஜ்ஜியகொடி, சிண்டிகேட் உறுப்பினர்கள் கண்ணன், பெரியகருப்பன், செல்லத்துரை ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கட்டண குறைப்பு குறித்து, நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். புதிய கட்டண விவரம் (அடைப்புக்குறியில் பழைய கட்டணம்): இளங்கலை செமஸ்டர் தேர்வு கட்டணம் ரூ.65 (ரூ.45). முதுகலை கட்டணம் ரூ.120(85), செய்முறை தேர்வு கட்டணம் (யு.ஜி.,) ரூ.100 (90), முதுகலை கட்டணம் ரூ.150 (100), புரவிஷனல் சான்று-ரூ.300 (200), பி.எச்டி., புரவிஷனல்- ரூ.1000 (500), ஸ்பெஷல் கான்வகேஷன் சான்று- ரூ.1500 (1000), உண்மை தன்மை சான்று- ரூ.1500 (1000).