சேலம் மாணவனுக்கு ஆஸ்திரேலிய வாசகர் உதவி
சென்னை: ஆஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போட்டிக்கு செல்ல வசதியில்லாதவர்கள் சிலருக்கு திருச்சி கலெக்டர் உதவி செய்துள்ளார். ஆனால் சேலத்தை சேர்ந்த 12 வயது மாணவன் முகமது அனஸ் என்பவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வசதியில்லாமல் தவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாணவனுக்கு உதவ ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சேலத்தை சேர்ந்த கணபதி சுப்ரமணியம் என்ற தினமலர் வாசகர் முன் வந்துள்ளார். இதற்காக அவர் தனது தொலைபேசி எண் (0061437022457) மற்றும் இ-மெயில் முகவரி (ganpath_s_75@yahoo.com) வெளியிட்டுள்ளார்.