உள்ளூர் செய்திகள்

கணினி பயிற்சி முகாம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல்: "இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது" என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், கம்ப்யூட்டர் டேலி இலவச வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கி 30 நாட்கள் நடக்கிறது. பயிற்சியில், எம்.எஸ்.ஆஃபீஸ், கணக்கியல் பதிவுகள், கம்ப்யூட்டரில் பதிவேடுகள் உருவாக்குதல், வரவு-செலவு வவுச்சர் பதிவு செய்தல், விற்பனை வரி அண்டு வருமான வரி பதிவுகள் கற்றுத்தரப்படுகிறது. மேலும், கொள்முதல் மற்றும் விற்பனை பதிவேடுகள் உருவாக்குதல், லாப நஷ்ட கணக்கு, பேலன்ஸ் சீட் தயாரித்தல் உள்ளிட்ட அக்கவுண்டன்டாக பணிபுரிய தேவையான அனைத்து தொழில் நுட்ப விபரங்களும் கற்றுத்தரப்படும். தனியார் நிறுவனங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாகி விட்டதால், கம்ப்யூட்டர் டேலி படித்தவர்களுக்கு அதிக தேவையும், வரவேற்பும் உள்ளது. ஆர்வமுள்ள அக்கவுண்டன்சி மற்றும் பேசிக் கம்ப்யூட்டர் தெரிந்தவர்கள், நாளைக்குள் (செப்., 27), இயக்குனர், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ரவின்பிளாசா, திருச்சி ரோடு நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்த பட்ச கல்வித்தகுதி, பிளஸ் 2, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு கீழே, பயிற்சி செலவு, பயிற்சி பொருட்கள், உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு, 04286 221004, 89030 13980, 94432 40899, 99408 66612 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்