ஐதராபாத்தில் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா
புதுடில்லி: சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, நவம்பர் 14ம் தேதி முதல், 20ம் தேதி வரை, ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. தி கோல்டன் எலிபென்ட் என, பிரபலமாக அழைக்கப்படும், சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, ஐதராபாத்தில், ஒரு வாரம் நடைபெற உள்ளது. நான்கு பிரிவுகளில், போட்டியில் பங்கேற்கும் படங்கள் திரையிடப்படுகிறது. இது, 18வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா. சிறந்த படமாக தேர்வாகும் படத்திற்கு, தங்க யானை கோப்பையும், 2 லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்படுகிறது. இரண்டாவது படத்திற்கு, தங்க யானை கேடயமும், ? லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்படுகிறது. இந்த விழாவில், சர்வதேச அளவில், 70 நாடுகளில் இருந்து, 845 படங்கள் பங்கேற்க உள்ளன. இதற்கு முன் நடந்த, சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில், விருதுகள் பெற்ற படங்களும், இதில், திரையிடப்பட உள்ளன.