விவசாய பல்கலைகளுக்கு அந்தஸ்து உயர்வு இல்லை
பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதை தெரிவித்தார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் இம்பாலில் மத்திய பல்கலைக்கழகம் இருப்பதாலும் தற்போது இயங்கும் மாநில விவசாய கல்லூரிகள் மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியை ஏற்கனவே பெற்று வருவதாலும் இந்த மாற்றம் தேவையற்றது என்று அவர் கூறியுள்ளார். பொதுவாக இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் விவசாய பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி செய்வதை சுமையாக நினைப்பதாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்ந்த விவசாய பல்கலைக்கழகங்கள் உள்ளதாலும் இந்த அந்தஸ்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப் பட்டது. லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி செய்ய பஞ்சாப் அரசு சமீபத்தில் மறுத்துள்ளது. இதற்கான நிதியைப் பெற மாநில அரசு கோதுமை மற்றும் அரிசி மூட்டைகள் ஒவ்வொன்றுக்கும் 50 பைசா கூடுதல் வரியாக வசூலிப்பதன் மூலமாக சமாளிக்கலாம் என்ற ஆலோசனையையும் இப்பல்கலைக்கழகம் கூறியது. ஆனால் இதனை மறுத்துள்ள பஞ்சாப் அரசு, நிதிக்கான வழிமுறைகளை பஞ்சாப் பல்கலைக்கழகமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.