இக்னோ சென்னை மண்டல இயக்குனர் பொறுப்பேற்பு
சென்னை: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் சென்னை மண்டல இயக்குனராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். இவர், இக்னோ மதுரை மண்டல அலுவலக இயக்குனராக 2007ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். ‘பொருளாதாரத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்ற பன்னீர்செல்வம், தொலைநிலைக் கல்வியில் 14 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சென்னை மண்டலத்திற்கு தேவையான பிரத்தியேக படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.