உள்ளூர் செய்திகள்

காந்திகிராமம் பல்கலையில் காகிதம் இல்லாத நிர்வாகம்

திண்டுக்கல்: காந்திகிராமம் பல்கலையில் காகிதம் பயன்பாடில்லாத நிர்வாகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காகிதம் உற்பத்திக்காக ஏராளமான மரங்கள் அழிக்கப்படுவதை தவிர்க்க காகிதம் பயன்பாடு இல்லாத அரசு நிர்வாகத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் இ-கவர்னன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. அதன்படி காந்தி கிராம பல்கலையிலும் காகிதம் பயன்பாடில்லாத நிர்வாகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலையில் வாரத்திற்கு ஒரு ரீம் அளவிற்கு காகிதம் தேவை உள்ளது. ஆன்-ன் பயன்படுத்துவன் மூலம் காகிதம் தேவையை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக துணை வேந்தர், பதிவாளரின் உத்தரவுகள், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் அனைத்தும் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. விரைவில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் செயல்படுத்தப்பட உள்ளது. துணைவேந்தர் நடராஜன் கூறுகையில், "2015 ஜூன் மாதத்திற்குள் காகிதம் பயன்பாடில்லாத பல்கலையாக மாற்றப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்