உள்ளூர் செய்திகள்

பேருந்தில் கூட்ட நெரிசல்: மாணவிகள் மயக்கம்

ஆத்தூர்: பஸ்சில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த மாணவிகள் ஆத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடமலை, பைத்தூர் உள்ளிட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தம்மம்பட்டி - ஆத்தூர் வழித்தடத்தி்ல் பள்ளிப் நேரத்தில் 1 பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ்சில் எப்போதுமே கூ.ட்டமாகவே இருக்கும். இந்நிலையில் பஸ் கூட்ட நெரிசலில் சிக்கி வினோதினி, ஷோபனா மற்றும் திவ்யா மாணவிகள் மயக்கமாயினர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பள்ளி நேரத்தில் மேலும் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்