தனி நபர் விழாக்களில் அரசுப்பள்ளி மாணவர்கள்
முருக்கேரி: திண்டிவனத்தில் தனி நபர்கள் நடத்தும் விழாக்களில் நிவாரணம் வழங்குவதாக கூறி பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ள வைக்கும் அவலம் நீடித்து வருகின்றது. திண்டிவனம் பகுதியில் சில தனி நபர்கள், தங்கள் விழாக்களுக்கு அரசுப் பள்ளி மாணவ மாணவிகளை சீறுடை அணிந்து வர சொல்லி அழைத்து வந்து பெயரளவில் நோட்டு, பேனா, சீறுடை வழங்குகின்றனர். தனி நபர்கள் நடத்தும் விழாக்களில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ள வைக்க கூடாது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.