உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் தின கருத்தரங்கு; மாணவர்களுக்கு அறிவுரை

கூடலூர்: கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் உலக நுகர்வோர் தின கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராபட் தலைமை வகித்து பேசும்போது, "நுகர்வோர் கடமைகள் குறித்து மாணவர்கள் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார். நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்ரமணி பேசும்போது, "உடலில் ஏற்படும் குறைகளை தீர்ப்பதாக கூறி வரும் விளம்பரங்களை மட்டும் நம்பாமல், பொருள்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து வாங்க வேண்டும்" என்றார். கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் முத்து பேசும்போது, "பொருள்களின் தரத்தை உறுதி செய்து அதனை ரசீதுடன் வாங்க வேண்டும்" என்றார். கருத்தரங்கில் நுகர்வோர் மையத்தின் நிர்வாகிகள், தனிஸ்லால், சத்தியசீலன், உப்பட்டி பாரத மாதா பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலக உதவியாளர் கிருஷ்ணன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்