உள்ளூர் செய்திகள்

புதிய கண்டுபிடிப்பு: வி.ஐ.டி. மாணவர்களுக்கு விருது

வேலூர்: மின் மற்றும் எரி சக்தி உற்பத்திக்கான புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த வி.ஐ.டி. மாணவ மாணவிகள் ஏழு பேருக்கு டான்போஸ் இந்தியா நிறுவனம் விருது வழங்கி உள்ளது. டென்மார்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு உலக அளவில் மின் மற்றும் எரிசக்தி சாதனங்கள், தொழில் நிறுவனங்களுக்கான இயக்கிகள், குளிர் சாதனங்கள் உற்பத்தியில் புகழ் பெற்ற டான்போஸ் நிறுவனம், தனது துணை நிறுவனமாக டான்போஸ் இந்தியாவை டெல்லியில் இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் மின் மற்றும் எரிசக்தி உற்பத்திக்கு புதிய தொழில் நுட்பங்கள் சம்பந்தமாக இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவிலான போட்டிகளை பெங்களூருவில் நடத்தியது. இதில் பல்வேறு பல்கலை, கல்லூரிகளைச் சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் 30 குழுக்களாக பிரிந்து தங்களின் மின், எரிசக்தி உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தனர். இதில் வேலூர் வி.ஐ.டி. பல்கலை எம்.டெக். பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ் படிக்கும் மாணவ மாணவிகள் நகல் தொம்ரே, பிரியங்கா ரானா, ரத்திகா சிங் ரவாத் வழங்கிய இன்வெர்ட்டர் டிஸைன் அண்டு கண்ட்ரோல் அப்ளிகேவுன் ஆய்வு அறிக்கையும், முகமது அசாருதின் வழங்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நிலையான மின் மேலாண்மை தொழில் நுட்பம், பி.டெக். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கும் சுபம் அகர்வால், சர்வேஸ் சிங், ஹிராக் ராஜீ பதானி, ஆதித்யா கண்டல்வால், திலீப் ஆகிய மாணவ மாணவிகள் சமர்ப்பித்த ஆராய்ச்சி அறிக்கைகள் சிறந்த அறிக்கைகளாக தேர்வு செய்யப்பட்டது. டான்போஸ் இன்னவெர்ட்டர் விருது 2014 வழங்கும் விழா வி.ஐ.டி.யில் நேற்று நடந்தது. வி.ஐ.டி. எலக்ட்ரிக்கல் தொழில்நுட்ப பள்ளி டீன் பார்த்தசாரதி மல்லீக் வரவேற்றார். வி.ஐ.டி., துணைவேந்தர் ராஜூ தலைமை வகித்தார். டான்போஸ் இந்திய நிறுவனத்தின் தலைவர் ரவிசந்திரன் புருஷோத்தமன் சிறந்த அறிக்கைகள் வழங்கிய வி.ஐ.டி. மாணவ மாணவிகள் ஏழு பேருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு, விருதுகள் வழங்கினார். விழாவில் டான்போஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகிகள் கபில், எழில், விழா ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர், பேராசிரியர் ஜோஸ்வா சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்