உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்காக நேஷனல் ஜியாக்ரபிக் வெளியிட்ட பத்திரிக்கை

புதுடில்லி: ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறுபட்ட பயனுள்ள தகவல்களை வழங்கும் வகையில், நேஷனல் ஜியாக்ரபிக், ஒரு பத்திரிக்கையைத் தொடங்கியுள்ளது. நேஷனல் ஜியாக்ரபிக் என்பது, தனது பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் சேனல்களுக்காக புகழ்பெற்று விளங்கும் ஒன்றாகும். தற்போது, ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையிலும், அவர்களுக்குத் தேவையான கல்வி தகவல்கள் கிடைக்கப் பெறவும், பத்திரிக்கை வெளியிடப்பட்டுள்ளளது. Explorer magazine எனப்படும் இந்த பத்திரிக்கை, மாணவர்கள் பாடப்புத்தகத்தில் படிப்பதை விடவும், மிக அதிக தகவல்களை ஆழமாக படித்து தெரிந்துகொள்ளும் முறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்