விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு முகமை அறிவுரைப்படி விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை(ஜூலை 25) காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணிவரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. பிரபல தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. விருதுநகர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயனடையலாம். முகாம்களின் மூலம் இதுவரை 959 பேர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பணி நியமனம் பெற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.