புத்தகம் படிக்கும் போராட்டத்தில் மாணவ, மாணவியர்
ஈரோடு: கல்லூரி வாயில் முன், புத்தகம் படிக்கும் போராட்டத்தில் மாணவ, மாணவியர் ஈடுபட்டனர். ஈரோடு சி.என்.கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும், என்று கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கல்லூரி வாயில் முன் பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று, புத்தகம் வாசிப்பு போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதேபோல், கல்லூரி ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும், கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஆதித்தமிழர் பேரவை மாநகர மாவட்ட செயலாளர் அறிவழகனும் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.