எஸ்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் கலந்துரையாடல்
திருப்புத்தூர்: ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில், செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் மாணவர்கள் கலந்துரையாடல் நடந்தது. சேர்மன் சந்திரசேகர் தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் கருப்புச்சாமி வரவேற்றார். முதல்வர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். சிறப்புஆலோசகர் மணிமாலா, மாணவர்களுக்கு எச்.ஐ.வி.,எய்ட்ஸ் குறித்த விளக்கமளித்தார். மாணவர்கள் கலந்துரையாடல் நடந்தது. பேராசிரியர் கவுதம் நன்றி கூறினார்.