ஸ்னுாக்கர் பயிற்சி பெற இருபாலருக்கும் அழைப்பு
சேப்பாக்கம்: ஸ்னுாக்கர் பயிற்சி பெற, இருபாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி. நகரில் உள்ள, சலீம் ஸ்னுாக்கர் பள்ளி சார்பில், இருபாலருக்கும் ஸ்னுாக்கர் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதில், 12 வயது பூர்த்தி அடைந்த இருபாலரும் பங்கேற்கலாம். தினமும் காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை, பயிற்சிகள் நடைபெற உள்ளன. வரும் செப்., 1ம் தேதி துவங்கி, பயிற்சிகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர், 80560 14750 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.