அபாகஸ் போட்டியில் செஞ்சி மாணவர்கள் வெற்றி
செஞ்சி: சென்னையில் நடந்த அபாகஸ் போட்டியில் செஞ்சி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாநில அபாகஸ் போட்டிகள் நடந்தன. இதில் செஞ்சி ஐடியல் பிளே அபாகஸ் பள்ளி மாணவர்கள் 25 பேர் பங்கேற்றனர். ஆறு மாணவர்கள் முதல் இடமும், 14 பேர் இரண்டாமிடமும், 5 பேர் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களை ஒருங்கிணைப்பாளர் ஜெக்கம்மாள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.