உள்ளூர் செய்திகள்

பிரிஸ்பேனில் மோடிக்கு வணக்கம் செலுத்திய மாணவி

பிரிஸ்பேன்: ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, முதலில் மியான்மர் சென்று, பிறகு அங்கிருந்து பிரிஸ்பேனுக்கு நவம்பர் 14ம் தேதி சென்றார். நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்பதால், அதனை கொண்டாட எண்ணிய மோடி, தனது நிகழ்ச்சி நிரலில் திட்டமிடாத போதும் தன்னுடன் வந்த அதிகாரிகள் குழுவிடம், தான் பிரிஸ்பேனில் வாழும் இந்திய பள்ளி குழந்தைகளை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். இதனால் அவசரமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஜி20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பல்கலைகழகத்தில் இந்திய குழந்தைகள் சிலரை மோடி சந்தித்து, அவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடினார். மோடியை சந்திப்பதற்காக அழைக்கப்பட்ட குழந்தைகளில் தமிழ் பேசும் மாணவியும் ஒருவர். அவரை மோடியை, வணக்கம் என தமிழில் பேசி வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்