உள்ளூர் செய்திகள்

எம்.டி., சித்தா பிரிவு கலந்தாய்வில் முறைகேடா?

சென்னை: சென்னை, பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., சித்தா பிரிவுக்கு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று நடந்தது. ஒதுக்கீட்டு பிரிவில், ஏதோ குளறுபடி நடக்கிறது; வெளிப்படைத் தன்மை இல்லை என, கலந்தாய்வுக்கு வந்தோர், திடீரென போர்க்கொடி உயர்த்தினர். இதனால், கலந்தாய்வு நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். விதிமுறைப்படிதான் கலந்தாய்வு நடக்கிறது; எந்த குளறுபடியும் இல்லை என, சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர். பின், போலீஸ் பாதுகாப்புடன் கலந்தாய்வு நடந்தது. கடந்த வாரம் நடந்த சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புக்கான மறு கலந்தாய்விலும், இதேபோன்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்