உள்ளூர் செய்திகள்

கரிசல் திரைவிழாவில் பாரதியார் பல்கலை சாம்பியன்

திருநெல்வேலி: நெல்லையில் நடந்த கரிசல் திரைவிழாவில், கோவை பாரதியார் பல்கலை மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொடர்பியல் துறை சார்பில், 10ம் ஆண்டு கரிசல் திரைவிழா, மூன்று நாட்கள் நடந்தது. தமிழகம், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்து கல்லூரி, பல்கலை மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஓவியம், புகைப்படம், குறும்படம், நாடகம் உள்ளிட்ட, 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்று, கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். புதுக்கோட்டை ஜெ.ஜெ., கல்லூரியினர் இரண்டாம் இடம் பிடித்தனர். சென்னை பல்கலை மாணவி அர்ச்சனா, சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று மாலை நிறைவு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்