பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு
வெம்பக்கோட்டை: சிவகாசி பி. எஸ். ஆர். இன்ஜினியரிங் கல்லூரியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. காக்சிடல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் நடந்த தேர்வில் 52 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. முதல்வர் விஷ்ணுராம் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். வேலைவாய்ப்பு அதிகாரி சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.