உள்ளூர் செய்திகள்

அரையாண்டு தேர்வு; ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பு

திண்டுக்கல்: அரையாண்டு தேர்வு நடக்கும் போது மக்கள்தொகை கணக்கெடுப்பு பெயரில் ஆதார் அட்டையுடன், வாக்காளர் அட்டை இணைக்கும் பணிக்கு ஆசிரியர்கள் செல்வதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் ஜெகதீஷ்குமார், பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட பிழைகளை திருத்தம் செய்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற பணிகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்களை முழுத்தேர்ச்சி அடைய வைப்பதற்கு பல்வேறு பயிற்சி அளிப்பதிலும், சிறப்பு வகுப்பு எடுப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுத்தேர்வு செய்முறை தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்வதாலும், ஆசிரியர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்