உள்ளூர் செய்திகள்

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பட்டமளிப்பு விழா

கோவை: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி அபிராமானந்தர் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உழைக்க வேண்டும். வளமான வாழ்க்கையோடு திருப்தியாக வாழ வேண்டும், என்றார்.ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி பேசுகையில், செய்யும் பணியை எப்போதும் பணத்தோடு ஒப்பிட்டு செய்யக் கூடாது. பணத்தை அடிப்படையாய் கொண்டு செய்யும் வேலையால், மன அழுத்தம் ஏற்படும். பெற்றோரை எப்போதும் பேணிக்காக்க வேண்டும். ஒவ்வொருவரும் நாட்டு முன்னேற்றதையும் அடிப்படையாக கொண்டு உழைக்க வேண்டும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்