கல்லூரி மாணவியர் ஏற்படுத்திய தூய்மை விழிப்புணர்வு
ஊட்டி: ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில், நேற்று துாய்மை பணி நடந்தது. ஊட்டியில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில், கடந்த, 10 ஆண்டுகளாக சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, விலங்கியல் துறை தலைவர் டாக்டர் மகேஸ்வரி தலைமையில் நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், 80 மாணவியர் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, காந்தல் குருசடி காலனி, சிலாட்டர் ஹவுஸ், கால் பந்து மைதானம் பகுதிகளில் குப்பைகளை அகற்றி துாய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன. சேகரிக்கப்பட்ட குப்பை களை, நகராட்சி உத்தரவின் பேரில், துப்புரவு தொழிலாளர்கள் எடுத்து சென்றனர். வரும் இரண்டு நாட்களில், பிங்கர்போஸ்ட், கல்லுாரி சுற்றுப்புற பகுதிகள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் ஆறாவது மைல் பகுதிகளில் இப்பணியை நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.