உள்ளூர் செய்திகள்

கே.பி.ஆர்., இன்ஜி., கல்லூரிக்கு ’ஏ’ கிரேடு

கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர்., இன்ஜி., கல்லுாரிக்கு, நாக் அமைப்பு ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. விஸ்வேஸ்வரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பல்வீர ரெட்டி தலைமையிலான குழுவினர், கல்லுாரியில் ஆய்வு நடத்தினர். கற்றல், கற்பித்தல், மதிப்பீடு, ஆராய்ச்சி, வேலை வாய்ப்பு உட்பட, பல அம்சங்கள் குறித்து அறிந்தனர்.நாக் அமைப்பின், 14வது கூட்டம், கடந்த, 29ம் தேதி நடந்தது. இதில், இக்கல்லுாரிக்கு ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. ஏ கிரேடு அந்தஸ்து, கல்லுாரிக்கு, நிதி உதவியுடன் கூடிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவும் என, கல்லுாரியின் முதல்வர் பொம்மண்ணராஜா பெருமிதம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்