கால்பந்து அணிக்கு இளம் வீரர்கள் தேர்வு
சென்னை: ஐ - லீக் கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான, இளம் வீரர்கள் தேர்வு, தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. கடந்த ஐ - லீக் கால்பந்து சீசனில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடரில், தமிழகத்தில் இருந்து, மகோகனி புட்பால் கிளப் என்ற அணி மட்டுமே பங்கேற்றது. அந்த கிளப் சார்பில், அடுத்த ஆண்டுக்கான அணி தேர்வு, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் ஏப்ரல், 1,2,3ம் தேதிகளிலும், துாத்துக்குடியில் ஏப்ரல், 8,9, மதுரையில், 10, 11, ஊட்டியில், 13,14 கோவையில், 15,16, தஞ்சாவூரில், 16 திருச்சியில், 17ம் தேதிகளிலும், கடலுார், நாகப்பட்டினம், ஈரோடு மாவட்டங்களில், மே மாதத்திலும் வீரர்கள் தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, இலவச கல்வி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, அரிந்தம் பிஸ்வாஸ் என்பவரை, 98844 80480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.