தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர்க்கை துவக்கம்
சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பட்டப் படிப்பிற்கும்; பட்டம் பெற்ற மாணவர்கள், முதுகலை பட்டப் படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், ஏப்., 15ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, 9841192332, 9884159410, 044 - 28440102 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.