தியாகராஜர் கல்லுாரி தேர்வு முடிவு வெளியீடு
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரி தேர்வாணையர் அருண்நாகேந்திரன் தெரிவித்துள்ளதாவது: ஏப்.,2016 பருவத்திற்கான எம்.பில்., முதுநிலை, இளநிலை, சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளின்(தனி தேர்வர்கள் உட்பட) அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடந்த தேர்வுமுடிவுகள் www.tcarts.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் விபரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.