உள்ளூர் செய்திகள்

பொறியாளர் கவுன்சிலில் சேர ஆர்வம் அதிகரிப்பு

மதுரை: மதுரையில், இந்திய பொறியாளர் கவுன்சில் சார்பில் தொழில் முறை பொறியாளர் நாள் கொண்டாடப்பட்டது. இதில், கவுன்சிலில் பதிவு செய்த பொறியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  கவுன்சிலின் கவர்னர் குழு உறுப்பினர் சன்னா ரத்தினவேல் கூறியதாவது: சிறந்த பொறியாளர் களை உருவாக்க இந்திய பொறியாளர் கவுன்சில் துவக்கப்பட்டது. இது, இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டது. பொறியியல் படிப்பை முடித்தவர்கள், ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் இதில் பதிவு செய்யலாம். நவ., 2015ல் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. தற்போது இந்தியா முழுவதும் 3000 உறுப்பினர்களுக்கு மேல் உள்ளனர். இளைஞர்கள், மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர், என்றார்.நிகழ்ச்சிக்கு கவுன்சிலின் உறுப்பினர் செயலர் டாக்டர் ஸ்வரூப் தலைமை வகித்தார். கவுன்சிலில் பதிவு செய்த உறுப்பினர்கள் கனடா போன்ற நாடுகளில் எப்படி வேலை பெறுவது எப்படி என்பது குறித்து கத்ரினா முர்ரே விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்