பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள், கட்டுரை போட்டி
கோவை: மனிதநேய பேரவையின், உலக சமாதான நட்புறவு பூங்கா சார்பில், பள்ளி மாணவர்களுக்கான, திருக்குறள், கட்டுரைப்போட்டிகள், வடவள்ளி, மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில், வரும் 20ம் தேதி நடக்கிறது. மனிதநேய பேரவை, உலக சமாதான நட்புறவு பூங்கா பொது செயலாளர் உமாதாணு வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், சாதித்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் திறனாக்க போட்டிகளில் வென்றவர்களுக்கு, பரிசளிப்பு விழா, ஜூலை 17ம் தேதி, வடவள்ளி, சங்கர நாராயணா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இதன் முன்னோட்டமாக, திருக்குறள், கட்டுரை போட்டிகள், வரும் 20ம் தேதி, மருதமலை, தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள, பள்ளி மாணவர்கள் மட்டுமே, பங்கேற்க முடியும். ஒரு பள்ளியில், 10 மாணவர்கள் மட்டும், போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதல் கடிதம், கட்டாயம் சமர்பிக்க வேண்டும். அறிவுடைமை, கூடா நட்பு, செய்நன்றியறிதல் உள்ளிட்ட திருக்குறள் அதிகாரங்களில் இருந்து, தலைப்புகள் வழங்கப்படும். சிறந்த படைப்புகளுக்கு, ரொக்க பரிசு காத்திருக்கிறது. மேலும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற, அரசு, அரசு உதவிபெறும் மாநகராட்சி பள்ளிகள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களின் பட்டியல் வரவேற்கப்படுகிறது. இதுசார்ந்த கூடுதல் தகவலுக்கு, எண்: 10, யமுனா வீதி, கிரியோ கார்டன், கோவை- 46 என்ற முகவரியில் அல்லது, 93604 82003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.